search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக் ஷர்மா"

    அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvRCB
    ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சாஹல் வீசினார். முதல் ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் 12 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.


    ரன் விட்டுக் கொடுத்ததால் சோகத்தில் விராட் கோலி

    அதன்பின் வந்த விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் 34 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் ஆட்டமிழக்கும்போது டெல்லி டேர்டெவில்ஸ் 13 ஓவரில் 109 ரன்கள் தான் எடுத்திருந்தது. இதனால் டெல்லி அணி 150 ரன்களுக்குள்தான் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


    19 பந்தில் 46  ரன்கள் குவித்த அபிஷேக் ஷர்மா

    ஆனால் 6-வது வீரராக களம் இறங்கிய அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 19 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்னும், விஜய் சங்கர் 21 ரன்னும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

    இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
    ×